Ticker

6/recent/ticker-posts

Free 2GB Data Daily for Government College Students


Free 2GB Data Daily for Government College Students

கல்லூரி மாணவர்களுக்கு 2GB Data இலவசம்

அரசு கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தினமும் 2GB Data இலவசமாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதற்கான காரணத்தை முழுமையாக பார்ப்போம். 

கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரி மூடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் மூலம் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால் 1 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு ரத்துசெயப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி பாதிக்க கூடாதென்று, ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. 

இந்த அடிப்படையில் அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்கு தினமும் 2GB Data இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இனி இணையவழி மூலமாக மாணவர்கள் கலந்துகொள்ள பயன்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த plan ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நாள் ஒன்றுக்கு 2GB Data இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு கல்லூரியில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை: 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 உள்ளனர். இவர்களுக்கு பயன்படும் என்று இந்த அறிக்கை வெளியிட்டார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். 

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Post a Comment

0 Comments