Whatsapp will stop working on some iPhone and Android devices
Whatsapp நிறுவனம் ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளது. ஜனவரி 1 முதல் ஒரு சில மொபைல்களில் whatsapp பயன்படுத்த முடியாது என்று whatsapp நிறுவனம் கூறியுள்ளது. மிக பழமையான மொபைல்களில் whatsapp support ஆகாது என்று தெரிவித்துள்ளது. Whatsapp நிறுவனம் இதில் பல புதிய அம்சங்களை கொண்டு வந்து மக்களைக் கவர்கிறது. இந்தியாவில் அதிகமாக இதை பயன்படுத்தி வருகிறார்கள். எந்தெந்த மொபைலில் whatsapp பயன்படுத்த முடியாது என்று whatsapp நிறுவனமே mobile பெயர்களை குறிப்பிட்டு உள்ளது. iOS 9 version இருந்தால் அவைகளில் whatsapp பயன்படுத்தலாம். இதற்கு கீழே இருந்தால் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. Android 4.0.3 Version இருந்தால் பயன்படுத்த முடியும். இல்லையன்றல் பயன்படுத்த முடியாது என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Android- ல் பயன்படுத்த முடியாது mobile
HTC Desire, LG Optimus Black, Motorola Droid Razr, Samsung Galaxy S2 ஆகிய மொபைல்களில் WhatsApp பயன்படுத்த முடியாது என்று அறிவித்துள்ளது.
Apple- ல் பயன்படுத்த முடியாது mobile
iPhone 4, iPhone 4S, iPhone 5, iPhone 5S, iPhone 6, iPhone 6S ஆகிய மொபைல்களில் whatsapp பயன்படுத்த முடியாது என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
0 Comments